சமீபத்தில் முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த போட்டிகள் மட்டும் புனேவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. காவிரி பிரச்சனை உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்று ஒருசில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டம் செய்ததால் சென்னை போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் நடந்த முதல் போட்டிக்கு எதிராக தீவிர போராட்டம் நடந்தது. அன்றைய நாளில் சென்னை அண்ணா சாலையே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு போராட்டம் தீவிரமடைந்தது. இந்த போராட்டத்தில் சீருடை அணிந்த போலீசார்களை தாக்கியதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கோலிவுட் நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.