நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பல தியேட்டர்களில் அதிகாலை 5.30 மற்றும் 6.30 மணியளவில் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதைக்காண ரஜினி ரசிகர்கள் குவிந்திருந்தனர். மேலும், படம் நன்றாக இருப்பதாகவும் இணைய தளங்களில் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை காலா படத்தை தொடக்கம் முதல்வர் சுமார் 45 நிமிடம் தொடர்ச்சியாக தியேட்டரில் இருந்து ஒரு வாலிபர் தனது செல்போன் மூலம் முகநூலில் நேரலை செய்தார். இந்த செய்தி காலா படக்குழுவினரையும், தமிழ் சினிமா பட உலகினரையும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.