சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் வெற்றி படங்களில் ஒன்று 'பாட்சா'. இந்த படத்தின் நாயகியும், தற்போது அகில இந்திய மகளிர் காங்., பொதுச்செயலராக இருக்கும் நக்மா, நேற்று ரஜினியை அவரது போயஸ் தோட்ட வீட்டில் சந்தித்தார்.
ரஜினியை அரசியலுக்கு இழுக்க பாஜக உள்பட பல கட்சிகள் முயற்சித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான நக்மா, ரஜினியை சந்தித்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத்.