அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்.... சாட்டை துரைமுருகன் கைதுக்கு நாம் தமிழர் கண்டனம்

திங்கள், 11 அக்டோபர் 2021 (15:05 IST)
நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் சாட்டை துரைமுருகன். சீமானைப் போலவே ஆவேசமாக பேசி வெகுவாக கவனம் ஈர்த்தவர்களில் ஒருவர். ஆனால் அவரின் பேச்சே அவருக்கு பலமுறை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி தலைவர்களைப் பற்றி தவறாக பேசி சர்ச்சையில் சிக்கி அதனால் கட்சியில் இருந்து நீக்கப்படுவதும், பின்னர் சேர்த்துக் கொள்ளப்படுவதுமாக இருந்துவந்தார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கார் உதிரிபாக கடைக்காரரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது துரைமுருகன் திருச்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை முருகன் பல ஆவேசமான வீடியோக்களை தனது யூடியூபில் பதிவு செய்து வருபவர். இவர் திருச்சியில் உள்ள கார் உதிரி பாக கடைக்காரரை மிரட்டியதாக கூறப்படுகிறது.  அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு இப்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மலைகள் அகற்றம் தொடர்பாக நடந்த நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழக முதல்வரை தரம்தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்துள்ளார். இதையடுத்து அவர் மீது கண்டனங்கள் எழுந்த நிலையில் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 25 ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவின. ஆனால் அதை நாம் தமிழர் கட்சி இப்போது மறுத்துள்ளது. மேலும் ‘கன்னியாகுமரி கனிமவளக்கொள்ளைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் ‘சாட்டை’ துரைமுருகன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புனைவு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வழக்குகளிலிருந்து மீண்டுவர நாம் தமிழர் கட்சி துணை நிற்கும்” எனவும் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்