விக்கிரவாண்டியில் தனித்து போட்டி.. மாநில கட்சி அந்தஸ்து பெற்ற நாம் தமிழர் கட்சி அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 11 ஜூன் 2024 (11:08 IST)
விக்கிரவாண்டி தொகுதியில் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என நேற்று நாம் தமிழர் கட்சி அறிவித்த நிலையில் அந்த தொகுதியிலும் தனித்து போட்டி என்று நாம் தமிழர் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எட்டு சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்று மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்ற பின்னர் அக்கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் கட்சி இதுவரை சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்ட நிலையில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட்டது. அக்கட்சிக்கு இதுவரை மாநில அந்தஸ்து கிடைக்காத நிலையில் வழக்கமாக வழங்கப்படும் கரும்பு விவசாயி சின்னம் தரவில்லை என்பதும் இதனை அடுத்து மைக் சின்னம் தான் தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சின்னமாக இருந்தாலும் தனித்து போட்டியிட்டு எட்டு சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் வாங்கி நாம் தமிழர் கட்சி சாதனை செய்ததை பல அரசியல்வாதிகள் மற்றும் ரஜினிகாந்த் உட்பட பல திரையுலகினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ள நிலையில் மாநில கட்சி என்ற அந்தஸ்து பெற்ற பின் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கூடுதல் வாக்குகள் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்