தமிழ்நாட்டில் தற்போது விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளது. கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உயிரிழந்தார். எனவே, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் போதே இடைத்தேர்தல் நடத்தப்படும் அல்லது ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்து, இந்தியா முழுவதும் கடந்த ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட்டது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ஜூன் 21-ம் தேதியுடன் முடிவடைகிறது. வேட்புமனுக்கள் மீது 24-ம் தேதி பரிசீலனை செய்யப்படும் என்றும் மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26-ம் தேதி கடைசிநாள் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.