என்.ஐ.ஏ சோதனை சட்டவிதி மீறல்.. நாம் தமிழர் கட்சியின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு

Mahendran
வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (11:52 IST)
இன்று காலை முதல் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் திடீரென தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
குறிப்பாக சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்தது. நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர்களின் வீடுகளிலும் சோதனை நடந்ததாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் இந்த சோதனை சட்டவிதி மீறல் என குற்றம்சாட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளது.
 
மேலும் சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க அவகாசம் வழங்காமல் சோதனை நடத்தியதாக குற்றச்சாட்டு கூறியுள்ளது. இந்த வழக்கை பிற்பகலில் விசாரணை செய்வதாக நீதிபதி எம்.எஸ் ரமேஷ் அறிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்