ஜார்க்கண்டில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்தார். இதனிடையே, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும், இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, கைது நடவடிக்கைக்கு எதிராக ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்திற்கு ஏன் செல்லவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஜாமீன் கோரி ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்திய நீதிபதிகள், ஹேமந்த் சோரன் தரப்பு தாக்கல் செய்த மனுவை விசாரிக்க மறுத்துவிட்டனர். மேலும் ஜாமீன் மனுவை விசாரிக்க ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட முடியாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.