கொரோனா வார்டில் பணிபுரிந்த பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு !

Webdunia
வெள்ளி, 1 மே 2020 (15:18 IST)
சென்னை கீழ்பாக்கம்  அரசு மருத்துவமனையில் கொரோனா வார்ட்டில் பணிபுரிந்து வந்த ஒரு மாணவி மர்மான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த  மாணவி பிரதீபா, சென்னை கீழ்பாக்கம்  அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்துள்ளார்.அவர் மாணவியர் விடுதியில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில், இன்று அவர் தனது அறையில் இருந்து வெளியே வராததால் அவர் அசைவின்றிக் கிடப்பதைப் பார்த்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

அவர் எப்படி இருந்தா என்பது மர்ம்மாக இருப்பதால், பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பிறகுதான் உண்மை தெரியவரும், இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்