முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் சர்ச்சைக்குரிய வகையிலேயே இன்னும் இருந்து வருகிறது. 75 நாட்கள் அவருக்கு என்ன சிகிச்சைகள் கொடுத்தார்கள்? ஏன் சிசிடிவ் கேமிரா வைக்கவில்லை என்பது உள்பட பல கேள்விகளூக்கு பதில் இல்லை
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தப்படும் என்று சசிகலாவுக்கு செக் வைத்தார். இந்நிலையில் இன்று உண்ணாவிரத்தத்தில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், 'திமுக ஆட்சி அமைந்தால் எங்கள் முதல் கையெழுத்து ஜெயலலிதா மரணத்தின் மீதான நீதிவிசாரணை குறித்த கையெழுத்துதான் என்றும், நீதிவிசாரணை நடத்தினால் பெங்களூரு சிறையில் உள்ளவர்கள் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இப்போதைய ஆட்சியின் ரிமோட் கண்ட்ரோல் பெங்களூரு சிறையில் உள்ளது என்றும் இதுபோன்ற ஆட்சி ஒருபோதும் தேவையில்லை என்றும் ஸ்டாலின் ஆவேசமாக பேசினார். எடப்பாடி பழனிசாமி தில் இருந்தால் திராணி இருந்தால் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்த முடியுமா? என்றும் அவர் சவால் விட்டார்.