இந்திய கம்பூனிஸ்ட் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் முத்தரசன் நிதி அறிவிப்புகளை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விவரித்து வருகிறார். அதன் படி நேற்று சில அறிவிப்புகளை வெளியிட்டார். இதனை விமர்சித்து இந்திய கம்பூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு...
கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தது போல வங்கி உத்தரவாத நீடிப்பு கடன் வழங்குவது என்ற அறிவிப்புகள் மட்டுமே இருந்தது. இவை நடைமுறைக்கு பயனளிக்காது என்பதே கலந்த கால அனுபவம்.
இதில் கன்னித்தீவு கதை போல அறிவிப்புகள் தொடரும் என்ற மற்றொரு அறிவிப்பு தவிர நிதியமைச்சர் வேறு எதுவும் இல்லை. நிதியமைச்சர் ஊக்குவிப்பு ஊறுகாய் அளவுக்கு உதவாத ஏமாற்றம் என தெரிவித்துள்ளார்.