இந்துக்கள் இஸ்லாமியர்கள் இணைந்து வழிபாடு

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (15:55 IST)
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள சாம்பிராணி பட்டி கிராமத்தில் இந்துக்களுடன் இணைந்து முஸ்லிம் இன மக்களும் குடும்பமாய் வாழ்ந்து வருகின்றனர்.


 


இங்குள்ள மந்தை வெளி மலையாண்டி கோயிலில் ஆடி மாத விழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று மாலை கோயில் மந்தையில் அனைத்து சமுதாயத்து மக்களும் கூடி 3 முறை தரையில் விழுந்து வணங்கி எழுந்தனர். பின் தாரைதப்பட்டை முழங்க, வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக பொட்டல் நொண்டிக்கோயில் சாமி கோயிலை நோக்கி சென்றனர். அங்கு இருதரப்பு மக்களும் இணைந்து ஏராளமான பழங்களை இறைவனுக்கு படைத்து தீபாரதனை காட்டி சாமி கும்பிட்டனர்.
அடுத்த கட்டுரையில்