11 ஆவது நாளாக தொடர் உண்ணாவிரதம் – முருகனின் உடல்நிலைக் கவலைக்கிடம்!

வியாழன், 3 டிசம்பர் 2020 (15:39 IST)
வேலூர் ஆண்கள் சிறையில் இருக்கும் முருகன் தொடர்ந்து 11 ஆவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென, கடந்த செப்டம்பர் 2018ல் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநரின் பதில் இரண்டு ஆண்டுகளாக கிடைக்காமல் இருப்பதால் இன்னும் எந்த முடிவும் கிடைக்காமல் உள்ளது.

இந்நிலையில் வேலூர் ஆண்கள் சிறையில் இருக்கும் முருகன் தன்னை விடுதலை செய்ய வேண்டும் அல்லது ஜீவ சமாதி அடைய அனுமதி அளிக்க வேண்டும் என கோரி சிறையில் உனவுகளை உட்கொள்ளாமல் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து 11 நாட்களாக உணவு எடுக்காமல் தண்ணீர் மற்றும் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொள்வதாக சொல்லப்படுகிறது. இதனால் அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து மருத்துவர்கள் அவருக்கு குளுக்கோஸ் அளித்து வருகின்றனர்.  மேலும் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்