பன்னீர் செல்வத்திற்கு அதிகரிக்கும் ஆதரவு; ஆளுநரின் முடிவு என்ன??

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (10:53 IST)
தூத்துக்குடி மற்றும் வேலூர் அதிமுக எம்.பிகள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.


 
 
சசிகலாவுக்கு எதிராக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியுள்ளார். அதிமுக எம்.பிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக எம்.பிக்கள் பலர் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் வேலூர் மக்களவை தொகுதி அதிமுக எம்.பியான செங்குட்டுவன் மற்றும் தூத்துக்குடி மக்களவை தொகுதி அதிமுக எம்.பியான ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி ஆகியோர் ஓ.பி.எஸ்க்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
 
இதன் மூலம் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுக எம்.பிக்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஆளுநரின் முடிவில் தான் யார் முதல்வரா பதவி ஏற்பார் என தெரியவரும்.
அடுத்த கட்டுரையில்