காரைக்குடி பகுதியில் துணிக்கடை நடத்தி வருபவர் இளங்கோ மணி. கடந்த சில நாட்கள் முன்பு இளங்கோ தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டுள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு இளங்கோ அதிர்ச்சியடைந்தார்.
200 சவரன் தங்க நகைகளும், 5 கிலோ தங்கமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக இளங்கோ புகார் அளித்துள்ளார். உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.