இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி

புதன், 24 ஜனவரி 2018 (11:20 IST)
கணவரிடம் எழுந்த சண்டை காரணமாக தனது இரு குழந்தைகளையும் கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
குஜராத்தை சேர்ந்த சிராக்‌ஷா(40), அவரின் மனைவி ஜெகநேஷா(35) ஆகிய இருவரும் சென்னை வேளச்சேரிக்கு அடுத்துள்ள நுக்கம்பாளையத்தில் வசித்து வந்தனர். அவர்களுக்கு பாரிக்(3) மற்றும் ரேகியா (5 மாதம்) இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.  சிராக்‌ஷா ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
 
கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அந்நிலையில், நேற்று முன்தினம் தம்பதிக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், கோபமடைந்த சிராக்‌ஷா வீட்டை விட்டுசென்றுவிட்டார். இரவும் வீட்டிற்கு திரும்பவில்லை.
 
அந்நிலையில், நேற்று முன் தினம் இரவு ஜெகநேஷாவுக்கு சென்னையில் வசிக்கும் அவரின் உறவினர் ஒருவர் செல்போனில் அழைத்துள்ளார். ஆனால், வெகுநேரமாக அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து, சிராக்‌ஷாவின் வீட்டிற்கு போலீசார் சென்று பார்த்த போது, வீட்டின் கதவு உட்பக்கம் தாழிட்டிருந்தது. எனவே, பூட்டை உடைத்து உள்ளே சென்ற பார்த்த போது படுக்கையறையில் இரு குழந்தைகளும் பிணமாக கிடக்க, ஜெகநேஷா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
 
அவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி குஜராத்தில் உள்ள ஜெகநேஷாவின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும், இதுபற்றி விசாரிக்க சிராக்‌ஷாவின் செல்போனுக்கு போலீசார் தொடர்பு கொண்ட போது, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. கணவனிடம் ஏற்பட்ட சண்டை காரணமாக குழந்தைகளை தலையனையை அமுக்கி கொலை செய்த ஜெகநேஷா, பின் தற்கொலை செய்திருக்கலாம் என போலிசார் சந்தேகிக்கிறார்கள்.
 
வழக்குப்பதிவு செய்த போலீசார், சிராக்‌ஷாவை தேடி வருகின்றனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்