காலை தோளில் வைத்து...டூவீலரில் ஹெல்மெட் அணிந்து சென்ற நாய்...வைரல் வீடியோ

Webdunia
புதன், 8 ஜனவரி 2020 (19:13 IST)
வீடுகளில் நாய், பூனை, கிளிகளை போன்றவற்றை செல்லமாக பலரும் வளர்த்து வருகிறார்கள். இந்நிலையில், வித்தியாசமாக ஒருவர் தனது வீட்டில் வளர்த்து வரும் நாயின் தலையில் ஹெல்மெட் அணிவித்து டூவீலரில் கூட்டிச் செல்வது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
சமீபத்தில் மத்திய அரசு,டூவிலரில்  செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டுமென கூறியிருந்தது.
 
இதை அனைவரும் கடைபிடித்து வரும் வேலையில், தமிழகத்தில்  ஒருவர் தன் வீட்டில் வளர்த்து வரும் நாயை டூவிலரில் அழைத்துச் சென்றார். அப்போது அதற்கு ஒரு தலைக்கவசம் அணிவித்துள்ளார். அப்போது அந்த நாய் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு, தன் முன்னங் கால்களிரண்டை,வாகனம் ஓட்டுபவரின் தோளில் போட்டுக் கொண்டபடி தன் பின்னங் கால்களை ஹாயாக கீழே தொங்கவிட்டபடி சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்  வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்