தமிழகத்திற்கு மேலும் தண்ணீர் திறக்கப்படும்: குமாரசாமி!

Webdunia
வெள்ளி, 15 ஜூன் 2018 (18:27 IST)
சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறிய கர்நாடக அரசு சமீபத்தில் கபினி அணையில் இருந்து 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. 
 
கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம், விநாடிக்கு 35,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
கர்நாடக மாநிலம் வயநாடு, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணை நிறைந்தது. எனவே, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 
 
இந்நிலையில் கந்ராட முதல்வர் இது குறித்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதில் பிரச்சனை இல்லை. கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருவதால் இந்த முறை தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் பிரச்னை இருக்காது. 
 
தமிழகத்துக்கு நேற்று இரவு 20,000 கன அடிநீர் திறக்கப்பட்டது. மேலும், அணை நிறைய நிறைய இன்னும் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்