பேரவை விவகாரம்: கணவரை கண்டுகொள்ளாத தீபா

Webdunia
திங்கள், 6 மார்ச் 2017 (15:21 IST)
ஜெ.அண்ணன் மகள் தீபாவின் பேரவை விவகாரங்களில் இனி தலையிடமாட்டேன் என்று அவரது கணவர் மாதவன் தெரிவித்துள்ளது இருவருக்கும் மோதல் போக்கு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.


 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தான் அவரது அண்ணன் மகள் தீபா வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்தார். அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து அக்கட்சி தொண்டர்கள் தீபாவை ஆதரித்தனர். தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் தொண்டர்கள் குவிந்து அரசியலுக்கு வருமாறு கோரிக்கைகளை எழுப்பினர். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கினார். பேரவைக்கான கொடியையும் அறிமுகம் செய்தார். மேலும் நிர்வாகிகள் பட்டியலையும் வெளியிட்டார்.  நிர்வாகிகள் பட்டியல் வெளியீட்டிற்கு பின் தீபாவின் செல்வாக்கு சரிவை நோக்கி செல்வதாகவே தெரிகிறது. காரணம் நிர்வாகிகள் பட்டியலில் அவருக்கு வேண்டப்பட்டவர்களே தேர்வு செய்யப்படுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் தீபா வீட்டிற்கு வரும் தொண்டர்கள் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது.

இந்த நிலையில் நிர்வாகிகள் பட்டியல் விவகாரத்தில் தீபாவிற்கும் அவரது கணவருக்கும் மோதல் ஏற்படுள்ளதாக கூறப்படுகிறது. இனி தீபா பேரவைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. பேரவை விவகாரத்தில் தீபா தனித்து நன்றாகவே செயல்படுகிறார் என்றும் மாதவன் கூறினார்.

தீபா-மாதவன் மோதல் போக்கிற்கு தான் சொல்லும் நபர்களை தீபா ஏற்க மறுப்பதும், தனிச்சையாக செயல்படவே தீபா விரும்புவதும் காரணம் என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.
அடுத்த கட்டுரையில்