மோடி தான் கடைக்கோடி தொண்டனுக்கும் இதயதெய்வம் - தமிழக பாஜக ’டுவீட்’

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (13:30 IST)
திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசுவின் மகள் திருமணம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட,  தமிழக பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் எம்.ஜி.ஆருக்கு பிறகு தாம் ரசித்த ஒரே தலைவர் ஸ்டாலின் எனக் கூறினார். 
அவரின் இந்த கருத்து கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், பி.டி.அரசகுமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசியத் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் பாஜகவினர். அரசகுமார் திமுகவில் இருந்து பாஜகவுக்கு மாறியதால், அவரது பழைய விசுவாசம் இன்னும் மாறவில்லை போல என விமர்சனமும் செய்து வருகின்றனர்
 
இந்நிலையில், இது குறித்து பாஜக தலைலை கூடிப் பேசி, தமிழக பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்கும்  என பேச்சு எழுகிறது.
 
இந்நிலையில், தமிழக பாஜக தலைமை தனது டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளதாவது :
 
’’யாரையும் புகழ்ந்து பேசி அண்டி பிழைக்கும் நிலை உண்மையான  @bjp4tamilnadu தொண்டனுக்கு இல்லை.
 
ஆண்டிகள் கூடி தேர் இழுத்தாலும் "கைப்புள்ளை" வேண்டுமானால் சர்வாதிகாரி ஆகலாம்,கனவில் கூட என்றும் அரசனாக முடியாது.
 
அன்றும் இன்றும் என்றும் @narendramodi தான் கடைக்கோடி தொண்டனுக்கும்   இதயதெய்வம் ’‘ என தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்