ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர்!: திமுக பக்கம் திரும்புகிறதா பாஜக?!

ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (11:50 IST)
அடுத்த தமிழக சட்டசபை தேர்தலில் ஸ்டாலின்தான் முதல்வராவார் என பாஜக பிரமுகர் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக உறுப்பினர் பெரியண்ணன் இல்ல விழா ஒன்றில் பாஜக மாநில துணை தலைவர் பி.டி.அரசக்குமார் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர் ”மு.க.ஸ்டாலின் நினைத்திருந்தால் கூவத்தூர் சம்பவத்தின் போதே ஆட்சியை பிடித்திருக்க முடியும். ஆனால் அவர் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதை விரும்புகிறார். அதற்கான காலம் வரும். ஸ்டாலின் முதல்வராவார்” என பேசியுள்ளார்.

அதிமுகவில் கூட்டணியில் இருக்கும் பாஜக பிரமுகர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவர்தான் அடுத்த முதல்வர் என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததாலும், உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிகளை தராமல் ட்ரிக் செய்வதாலும் அதிமுக மீது பாஜக அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் திமுகவுக்கு ஆதரவாக பாஜக பிரமுகர் பேசியிருப்பது பாஜக அடுத்து திமுகவுடன் கூட்டணி அமைக்க போடும் பிள்ளையார்சுழியா என்றும் விவாதம் கிளம்பியுள்ளது.

ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுகவோடு பாஜக கூட்டணி சேர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்