இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Siva

திங்கள், 8 செப்டம்பர் 2025 (08:38 IST)
செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
காற்றின் திசை வேறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்த 6 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மழைக்கு ஏற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்