வட தமிழகத்தின் சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
வட தமிழகத்தின் சில பகுதிகளிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் நாளை லேசான மழை தொடரும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 8 அன்று ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.
செப்டம்பர் 9 என்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கோவை மலைப்பகுதிகள், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.