முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பென்னிகுயிக் குடும்பத்தினரை சந்தித்து பேசியது குறித்து பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “முல்லை பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களது சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும் - செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர்.
நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம். வாழ்க பென்னிகுயிக் அவர்களது புகழ்” என தெரிவித்துள்ளார்.
மேலும் பென்னிகுயிக் குடும்பத்தினர் இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K