21 ஆன் திருமண வயது: மநீம வரவேற்பு!!

வெள்ளி, 17 டிசம்பர் 2021 (11:22 IST)
பெண்களின் திருமண வயதை உயர்த்தியதற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு அளிப்பதாக தெரிவித்துள்ளது. 

 
இந்தியாவில் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும் ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு திருமண வயதை உயர்த்துவது குறித்து ஆராய மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த குழு தற்போது அறிக்கையை சம்ர்பித்தது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தப்படுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது விரைவில் சட்டமாக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆண்களின் திருமண வயது 21 ஆக உள்ள நிலையில், அதற்கு இணையாக பெண்களின் திருமண வயதும் உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனிடையே பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளதற்கு ம.நீ.ம வரவேற்பு தெரிவித்துள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்கு பேருதவியாய் அமையும் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவேண்டும் எனவும் மநீம கருத்து தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்