200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு திடீர் மயக்கம்: திருவள்ளூர் விடுதியில் பரபரப்பு!

புதன், 15 டிசம்பர் 2021 (21:09 IST)
200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு திடீர் மயக்கம்: திருவள்ளூர் விடுதியில் பரபரப்பு!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் விடுதியில் திடீர் என 200க்கும் மேற்பட்ட பெண்கள் கீழே விழுந்து மயக்கம் அடைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
திருவாரூர் மாவட்டத்தில் தனியார் பெண்கள் விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியில் 200க்கும் மேற்பட்ட கல்லூரியில் படிக்கும் பெண்கள் மட்டும் வேலை பார்க்கும் பெண்கள் தங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திடீரென அந்த விடுதியில் தங்கியிருந்த 200க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
திடீரென 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது ஏன் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்