மாநிலங்களவைத் தேர்தல்… போட்டியின்றி வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (16:54 IST)
தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக உள்ள நிலையில் செப்டம்பர் 13-ஆம் தேதி ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது

தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக உள்ள நிலையில் செப்டம்பர் 13-ஆம் தேதி ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி இந்த தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளராக எம்எம் அப்துல்லா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளராக எம்எம் அப்துல்லா அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரை எதிர்த்து அதிமுக சார்பில் யாரும் போட்டியாளராக அறிவிக்கப்படவில்லை என்பதால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்கான சான்றிதழை அவர் இன்று பெற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்