தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக்: எம்.எல்.ஏ கோரிக்கையால் மக்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 12 ஜூலை 2019 (19:51 IST)
பக்கத்து மாநிலமான ஆந்திராவில் வீடு தேடி ரேசன் பொருட்களை கொண்டு போய் சேர்க்கும் திட்டம் குறித்து அம்மாநில அரசு முயற்சித்து வரும் நிலையில் தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் மதுக்கடைகள் வேண்டும் என ஒரு எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். அந்த எம்.எல்.ஏ தனியரசு என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று சட்டப்பேரவையில் வேளாண்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு, ”மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டில் வாங்குவது மிக கஷ்டமாக இருப்பதாகவும், அந்த காலத்தில் புதுப்படங்களுக்கு டிக்கெட் பெறுவது போல ஒரு பாட்டில் வாங்குவதற்கு அதிக நேரமாவதாகவும், எனவே  தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் அமைக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்.
 
தனியரசு எம்.எல்.ஏவின் இந்த கோரிக்கையால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தாலும் இதுகுறித்த செய்தியால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும், விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும், படிப்படியாக மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் ஒரு எம்.எல்.ஏ சட்டப்பேரவையில் நடமாடும் டாஸ்மாக் வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பது கடும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்