ஒரு வாரம் டைம் வேணும்... அவகாசம் கேட்கும் எம்.ஏல்.ஏ பிரபு

செவ்வாய், 7 மே 2019 (10:36 IST)
தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி நோட்டீஸ் அனுப்பிதற்கு பதில் அளிக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என எம்.ஏல்.ஏ பிரபு கேட்டுள்ளார். 
 
தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவர் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.  
 
இந்நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்ட மூன்று எம்.எல்.ஏக்களில் ஒருவரான கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு மீண்டும் அதிமுக அணியிலேயே இணைவதுக்கு சம்மதம் தெரிவித்தார். 
ஆனால் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகிய இருவரும் சபாநாயகர் தங்கள் மேல் நடவடிக்கை எடுப்பதற்குத் தடை விதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரனைக்கு வந்து சபாநாயகரின் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், வழக்கு தொடராத எம்.ஏல்.ஏ பிரபு விளக்கம் அளிக்க ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும் என கேட்டுள்ளார். சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் இதற்கான மனுவை அவர் கொடுத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்