அப்போது, அவர் பேசியதாவது :
நான் கருணாநிதியின் மகன் தான். என்னைப் பார்த்தால் அதிமுகவினர் கூட பேசிச் செல்கின்றனர். ஆனால் என்னுடன் பழகிய திமுகவினர் கூட என்னோடு பேசுவதில்லை; இப்போது உள்ள நிலைமை எப்போது மாறும் என்பது எனக்கு தெரியும் என அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது :
மு.க.அழகிரி தன் உள்ளத்தில் எழுந்த குமுறலை வெளிப்படுத்தினார். அவர் பேசியது நியாயமான கருத்து என தெரிவித்தார்.