கடந்த மக்களைவை தேர்தலில் கூட்டணி அமைத்த பாஜக – அதிமுக தொடர்ந்து இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் முதற்கொண்டு தங்களது கூட்டணியை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பாஜக ஆதரவாளரான எஸ்.வி.சேகர், அமைச்சர் பாஸ்கரனின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டரில், பாஸ்கரன்னு ஒருத்தர் அமைச்சரா இருக்காரா? ஹல்லோ ராஜ்பவனா... என பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.