இடைத்தேர்தல் நடக்குமா? தேர்தல் அதிகாரி பதில்!

திங்கள், 13 ஜூலை 2020 (12:30 IST)
தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல். 

 
சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன்  உடல்நலக்குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். 
 
இவரின் எதிர்பாரா இறப்பை தொடர்ந்து தமிழக சட்டமன்ற தொகுதிகளின் காலியிடம் 3 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காத்தவராயன் (குடியாத்தம்) , கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்) மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். மேலும், இடைத்தேர்தலுக்கான தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்