ஆர்.கே.நகரை சுத்தம் செய்ய களமிறங்கும் திமுக; கெடு விதித்த மு.க.ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (15:06 IST)
இன்னும் ஓரிரு நாட்களில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்.கே.நகர் தொகுதியை திமுகவினர் சுத்தம் செய்வார்கள் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


 

 
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்.கே.தொகுதிக்கு சென்று பார்வையிட்டார். தூர்வாரப்படாத இணைப்பு கால்வாய் மற்றும் மழை நீர் கால்வாய் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
இந்த ஆட்சியை பொருத்தவரை எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது வேண்டிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்.கே.நகர் பகுதியில் திமுகவினர் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிற நிலையை உருவாக்கிட வேண்டாம்.
 
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2 முறை வெற்றிப்பெற்ற தொகுதியை ஆட்சியாளர்கள் கண்டும் காணாமல் விட்டிருப்பது கொடுமையாக இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்.கே.நகர் தொகுதியில் திமுகவினர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட உள்ளனர் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்