10 நிமிடத்தில் என்ன நடந்தது? துளைக்கும் ஸ்டாலின்!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (08:52 IST)
10 நிமிட ஆலோசனையில் தமிழக பிரச்னைகள் தொடர்பாக முதலமைச்சர் கேள்வி எழுப்பினாரா? ஸ்டாலின் கேள்வி. 

 
பிரதமர் மோடி நேற்று சென்னைக்கு வருகை தந்தபோது சுமார் எட்டாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் என்பது தெரிந்ததே.  தமிழக சுற்றுப்பயணத்தின் போது அரசு விழா முடிந்தவுடன் பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரிடமும் பத்து நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தினார். 
 
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், எய்ம்ஸ் குறித்து பிரதமரிடம் முதல்வர் கேள்வி எழுப்புவாரா? பிரதமர் மோடியிடம் நீட் விலக்கு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை உள்ளிட்ட தமிழக பிரச்னைகள் தொடர்பாக முதலமைச்சர் கேள்வி எழுப்பினாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்