பெயருக்கு பதவியை கொடுத்து அதிகாரத்தை பறித்த ஸ்டாலின்??

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (08:04 IST)
திமுகவில் துணைப் பொதுச்செயலாளரை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் தலைவரான ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 
திமுக பொதுக்குழு கூடியவுடன் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட துரைமுருகன் மற்றும் டிஆர் பாலு ஆகிய இருவரும் தங்களுக்கான பதவியை ஏற்றுக்கொண்டனர்.
 
இதனை அடுத்து துணை பொதுச் செயலாளர்களாக ஆ.ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் நியமிக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டது. இதனையடுத்து புதிய பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. 
 
இந்நிலையில், இதுவரை திமுக துணைப் பொதுச்செயலாளர்களை கட்சியின் பொதுச்செயலாளர் நியமித்து வந்தார். ஆனால் தற்போது சில சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டு திமுகவில் துணைப் பொதுச்செயலாளரை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் தலைவரான ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்த சட்டத் திருத்தத்தால் பொன்முடி, ஆ.ராசா ஆகியோரை  பொதுக்குழுவில் துணைப் பொதுச் செயலாளர்களாக அறிவித்தார் ஸ்டாலின். அதேபோல பழங்குடியினர் துணைப் பொதுச்செயலாளராகவும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே, ஆதிதிராவிடர், மகளிர், பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள்  துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் திமுகவில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவரும் துணைப் பொதுச்செயலாளராகும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்