பதவி விலகிய எடப்பாடியார்; பதவியேற்கும் மு.க.ஸ்டாலின்! – எளிமையான முறையில் ஏற்பாடு!

Webdunia
திங்கள், 3 மே 2021 (10:32 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி பதவி விலகியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில் அதிமுக தோல்வியை தழுவியதை தொடர்ந்து தனது முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார்.

அதை தொடர்ந்து மே 7ம் தேதி மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கொரோனா காரணமாக கவர்னர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்