மு.க.ஸ்டாலின் - ஜி.கே.வாசன் திடீர் சந்திப்பு

Webdunia
திங்கள், 11 ஜூலை 2016 (22:46 IST)
தாமகா நிர்வாகி குடும்ப இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலினும், ஜி.கே.வாசனும் திடீரென சந்திக் கொண்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
திமுக முன்னணி பிரமுகரும், கவிஞருமான தமிழச்சி தங்கப் பாண்டியன் மகளுக்கும், தமாகா முன்னாள் எம்பி  என்.எஸ்.வி. சித்தனின் பேரனுக்கும் திருமணம் மதுரையில் நடைபெற்றது.
 
இந்த திருமண விழாவுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் வருகை தந்தார். அதே போல், தமாகா தலைவர் ஜி.கே. வாசனும், அவரது  மனைவி சுனிதாவுடன் வருகை தந்தார்.
 
இந்த நிலையில், இருவரும் ஒருவருக்கு ஒருவர் நட்பு ரீதியாக வணக்கம் வைத்துக் கொண்னடர். மேலும், அருகருகே அமர்ந்து சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அடுத்த கட்டுரையில்