தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது..!? – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (10:47 IST)
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் அடுத்ததாக நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து அரசு ரீதியான ஆலோசனையை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள உள்ளார். இன்று காலை 11 மணியளவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்