முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் திமுக தென் மாவட்ட அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி இன்று சென்னை வந்தார். சென்னை வந்த அவர் சென்னை போலீஸ் கமிஷனர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மகனான மு.க.அழகிரி, ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும், கட்சிக்கு எதிராக நடந்து கொண்டதாலும் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தாலும், இவர் தொடர்பாக எந்த செய்தியாக இருந்தாலும் அது முக்கியத்துவம் பெறுகிறது. இந்நிலையில் சென்னை வந்த மு.க.அழகிரி புகார் மனு ஒன்றை போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ளார்.
அதில், இணையதளத்திலும் சமூகவளைதளத்திலும் தன்னை பற்றி முன்னுக்குபின் முரணான, தவறான கருத்துக்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.