இதற்கு முன்னதாகவே விஜயகாந்த் தனது கட்சி அலுவலகம் மற்றும் கல்லூரியையும், திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தையும் தற்காலிக மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் ரஜினி கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தை தற்காலிக மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சிக்கு தெரிவித்து இருந்தனர்.
இதுகுறித்து தற்போது ரஜினிகாந்த் தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளனர் அதில்,
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தை கரோனா சிகிச்சை வார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம் பராமரிப்பு பணி நடப்பதால் மண்டபத்தை தர முடியாது என கூறியதாக தவறான தகவல் பரவி வருகிறது என தெரிவித்துள்ளனர்.