நான் உயிரை விடுறதா சொல்லவேயில்லை.. அது போலியானது! – அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (13:54 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னை பற்றி சமூக வலைதளங்களில் வெளியான போஸ்டர் போலியானது என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ள நிலையில் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் சமீபத்தில் தான் ஜெயிக்காவிட்டால் இறந்து விடுவதாக விஜயபாஸ்கர் சொன்னதுபோல அவர் கண்ணீருடன் உள்ள போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் இதுகுறித்து அவரது முகப்புத்தக பக்கத்தில் விளக்கமளித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் “விராலிமலை தொகுதி மக்களிடையே எனக்கு நல்மதிப்பும், மரியாதையும் உள்ளது. மக்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். என்னைப்பற்றி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள போஸ்டர் போலியானது. நான் உயிரை விடுவதாக எப்போதும் சொல்லவில்லை. என்னுடைய அதிகாரப்பூர்வ பேஸ்புக், ட்விட்டரில் வெளியாகும் பதிவுகள் மட்டுமே என்னுடைய பொறுப்பு” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்