எனக்கு தீபாவளி கோயம்பேடு பேருந்து நிலையத்தில்தான்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (20:17 IST)
தீபாவளி தினத்தை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்களின் கூட்டம் இன்று முதல் அதிகரிக்கும் நிலையில் சென்னையில் பேருந்துகள், ரயில் நிலையங்களில் அளவுக்கதிகமாக கூட்டம் காணப்படுகிறது.

முன்பதிவு செய்யாதவர்களுக்காக தமிழக அரசு சென்னையில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஆயிரக்கணக்கில் சிறப்பு பேருந்துகள் வசதியை செய்துள்ளது. இந்த நிலையில் நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து போக்குவரத்து சேவையை கண்காணிக்க உள்ளதாகவும், தொழிலாளர்கள் அதிகம் உள்ள கோவை, திருப்பூரில் தீபாவளிக்காக கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீபாவளிக்கு முந்தைய நாள் விடிய விடிய அங்குள்ள நிலைமையை கண்காணிக்கவுள்ளதாகவும், அதனால் தனக்கு தீபாவளி கோயம்பேடு பேருந்து நிலையத்தில்தான் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அமைச்சரே நேரடி கண்காணிப்பில் ஈடுபடுவதால் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வாங்குவதில் சிக்கல் இருக்கும் என கருதப்படுகிறது.
 

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்