துணை முதல்வர் ஆகிறார் அமைச்சர் உதயநிதி? விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!!

Senthil Velan
வியாழன், 11 ஜனவரி 2024 (17:01 IST)
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
 
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியும் அளிக்கப்பட இருப்பதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
வரும் 21 ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாடு முடிந்ததும், அடுத்த சில நாட்களில் துணை முதல்வர் பதவி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் முதல்வர் ஸ்டாலின்,  வெளிநாடு செல்லும் முன்பாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்