என்ற திருக்குறளை கூறி தனது பட்ஜெட் உரையை அமைச்சர் தங்கம் தன்னரசு தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருக்குறளுக்கு குடிமக்கள் எளிதில் அணுகக் கூடியவராகவும் கடுமையான சொற்களை கூறாமல் ஆட்சி புரிந்து வரும் அரசனை உலகமே போற்றும் என்றும் அதேபோல் கடைகோடி மக்களும் எளிதில் அணுகக் கூடியவராக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளது தமிழ்நாட்டுக்கு பெருமை என்றும் அவர் முதல்வருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் 2023ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும்என்றும், கலைஞரின் கனவு இல்லம் என இத்திட்டத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2000 கி.மீ. சாலைப்பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்,