சிறப்பு திட்ட மண்டலம், 2 துணை மண்டலங்கள் மேகதாது திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான அனுமதிகளை விரைவில் பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும் - கர்நாடக மாநில பட்ஜெட்டில் உறுதி
கர்நாடக மாநிலத்தின் கனவு திட்டமான மேகதாது அணையை கட்ட ஏற்கனவே பிரத்யேக அமைப்பு உருவாக்கம் செய்யப்பட்டு அதற்கு கீழ் 2 தனி அமைப்புகள் செயல்படும் என்றும், அணை கட்டும் போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பு, வெட்டப்பட வேண்டிய மரங்களை அடையாளப்படுத்தும் பணி நிறைவு அடைந்துள்ளதாகவும் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.