பொதுபட்ஜெட் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு உரை!

Sinoj

வியாழன், 22 பிப்ரவரி 2024 (14:33 IST)
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று  பொது பட்ஜெட் குறித்து, அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றியாற்றினார்.

தமிழ் நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சமீபத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட் அறிக்கையை தமிழக நிதியமைச்சர்  தங்கம் தென்னரசு வாசித்தார்.
 
இதற்கு அதிமுக, பாமக, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான விமர்சனம் தெரிவித்தன.
 
இந்த நிலையில், இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பொது பட்ஜெட் குறித்து, அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றியாற்றினார்.
 
அதில், புதிய வறுமை ஒழிப்புத் திட்டத்தில் ஆதரவற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
 
திருநங்கைளின்  உயர்கல்வி செயலை தமிழக அரசே ஏற்கும் என  நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசை விட தமிழ்நாடு அரசுதான் கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் தமிழ் நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் திகழ்கிறது என்று தெரிவித்தார்.
 
மேலும் வெள்ள  நிவாரணம் தொடர்பாக  மத்திய அரசு இதுவரை எந்த நிதியையும் வழங்கவில்லை எனவும், மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை எனவும், மத்திய அரசு போதிய நிதி வழங்காததால்தான் தமிழ்நாடு அரசு கடன் சுமையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்