1ஆம் வகுப்பு சேர்க்கைக்கு சிபாரிசு கடிதம் கொடுத்த அமைச்சர் செங்கோட்டையன்

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2017 (15:22 IST)
தனியார் பள்ளி ஒன்றில் சிறுமி ஒருவருக்கு 1ஆம் வகுப்பில் சேர்க்க அமைச்சர் செங்கோட்டையன் சிபாரிசு கடிதம் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 


பள்ளி கல்வித்துறை அமைச்சராக பதவியேற்ற நாளில் இருந்து அமைச்சர் செங்கோட்டையன் செயல்கள் குறித்து அவ்வப்போது நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர். அவரது ஆங்கில புலமையை கேலி செய்து ஏராளமான மீம்ஸ் பரவியது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் 1ஆம் வகுப்பு சேர்க்கைக்கு இவர் கொடுத்த சிபாரிசு கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னை தனியார் பள்ளி ஒன்றில் சிறுமி ஒருவரை 1ஆம் வகுப்பில் சேர்த்துக்கொள்ளுமாறு அவரது லெட்டர் பேடில் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டு உள்ளது. அதில் அவரது கையெழுத்தும் உள்ளது. இந்த கடிதம் வைரலாக பரவி வருகிறது.
அடுத்த கட்டுரையில்