கிஷ்கிந்தா நிலம் அறநிலையத்துறைக்கு சொந்தமானதா? – அமைச்சர் சேகர் பாபு அதிர்ச்சி தகவல்!

வியாழன், 23 செப்டம்பர் 2021 (14:58 IST)
பிரபலமான கிஷ்கிந்தா தீம் பார்க் அமைந்துள்ள நிலம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தது முதலாக பல துறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் அத்துறை அமைச்சர் சேகர்பாபு தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதுவரை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இவ்வாறாக பல கோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் பேசியுள்ள அமைச்சர் சேகர் பாபு ”தனியார் தீம் பார்க் (கிஷ்கிந்தா) அமைந்துள்ள இடம் அறநிலையத்துறைக்க் சொந்தமானது. அதை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்