அரசனை நம்பி புருசனை விட்ட கதையாக..! – வாழ்க்கையை இழந்த பெண்!

வியாழன், 23 செப்டம்பர் 2021 (09:22 IST)
நாகர்கோவிலில் கல்லூரி மாணவரோடு கணவனை விட்டு ஓடிசென்ற பெண்ணை கல்லூரி மாணவரும் விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த 43 வயதான பெண் ஒருவருக்கு திருமணம் ஆகி கல்லூரி படிக்கும் ஒரு பெண்ணும், பள்ளி படிக்கும் ஒரு மகனும் உள்ளனர். இந்த பெண்ணுக்கு கடந்த சில காலமாக கல்லூரி மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இது இருவீட்டாருக்கும் தெரிய வந்து கண்டிக்கவே அவர்கள் இருவரும் சேர்ந்து ஊரை விட்டு ஓடியுள்ளனர். அவர்கள் காணாமல் போனது குறித்து இருதரப்பிலும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 6 மாதங்கள் கழித்து தனது வீட்டிற்கு போன் செய்த அந்த மாணவன் தான் அந்த பெண்ணுடன் வாழ விரும்பவில்லை என்றும், தன்னை அழைத்து செல்ல வருமாறும் அவரது வீட்டாரியம் தெரிவித்து தான் திருச்சியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் ஆசாரிப்பள்ளம் அழைத்து வந்த போலீஸார் காவல்நிலையத்தில் நடத்திய பேச்சுவார்த்தையில் மாணவன் தன் பெற்றோருடன் செல்லவே விரும்பியதால் அவர்களோடு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அந்த பெண்ணை அவரது உறவினர்கள் ஏற்க மறுத்ததால் அவரை காப்பகத்திற்கு போலீஸார் அனுப்பியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்