ஒமிக்ரான் பரவல் காரணமாக பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் புத்தாண்டு நெருங்கி வருவதால் மக்கள் கடற்கரைகளில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து பேசியுள்ள மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பொது இடங்களில் மக்கள் புத்தாண்டு கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும். சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டால் கட்டாயம் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.